போக்குவரத்தை சீர் செய்வதற்காக இருசக்கர ரோந்து வாகனத்தை காவல்துறை சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதிகளின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை சீர் செய்ய பொன்னேரி கரையிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை, அதைப்போல் பெரியார் நகர் முதல் மூங்கில் மண்டபம் வரை இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலைகளில் தன்னிச்சையாக நிறுத்துவதை தடுப்பதற்காக புதிய இருசக்கர போக்குவரத்து ரோந்து வாகனங்களை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சுதாகர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேலும் பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.