காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மூதாட்டியை கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை செய்தபோது அதே பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற மூதாட்டி மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மூதாட்டியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.