ஜப்பானில் புயல் தாக்கும் என அறிவிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜப்பானில் உள்ள சிபா மாகாணத்தில் புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு மிரினே என்று பெயர் வைத்துள்ளனர். இதனால் சிபா பகுதியில் உள்ள 29,000திற்கும் மேற்பட்ட பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்ற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து இன்று காலை நிலவரப்படி புயலானது வடகிழக்கு திசையை நோக்கி சுமார் 25 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு வருகிறது.
இந்த புயலானது கரையை கடக்கும் பொழுது மணிக்கு சுமார் 83 கி.மீ முதல் 126 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயலால் கடலோரப் பகுதிகளில் கனமழை மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலையாளர்கள் எச்சரித்துள்ளனர்.