தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடாக பால், மருந்து கடைகளை தவிர பிற கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும் என்றும், உணவு விடுதிகளில். டீக்கடைகளில் மாலை 5 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.