பேஷ்லெஸ் அல்லது இ-அசெஸ்மென்ட் திட்டத்தின் கீழ், வரி செலுத்துவோரின் குறைகளை தீர்க்க 3 அதிகாரப்பூர்வ இமெயில் முகவரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.வரி செலுத்துபவர்கள் வருமான வரி அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே, ஆன்லைன் மூலமாக வரிகளை மதிப்பீடு செய்யவும், வருமான வரி தொடர்பான நோட்டீஸ்களுக்கு விளக்கம் தரவும் பேஷ்லெஸ் அல்லது இ-அசெஸ்மென்ட் முறை கடந்த 2019ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், வரி செலுத்துபவர்கள் தங்கள் குறைகளை ஆன்லைனில் தெரிவிக்க, நிவாரணம் பெற 3 இமெயில் முகவரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பேஷ்லெஸ் மதிப்பீடுக்கு [email protected], பேஷ்லெஸ் அபராதத்திற்கு [email protected], பேஷ்லெஸ் மேல்முறையீடுக்கு samadhan.faceless.appeal @incometax.gov.in ஆகிய இமெயில்கள் மூலம் நிலுவையில் உள்ள தங்கள் வரி விவகாரங்கள் குறித்த குறைகளை தெரிவித்து விளக்கம் பெறலாம் என வருமான வரித்துறை டிவிட்டரில் தெரிவித்துள்ளது.