நம் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருந்தால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். உறவுகளில் பல பிரச்சனைகள் ஏற்படும். அந்த வீட்டில் செல்வம் நிலைக்காது. மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகும். ஒரு வீட்டில் தீய சக்திகளான எதிர்மறை ஆற்றல் இருக்கின்றதா? என்பதை உறுதி செய்வதற்கு 3 பச்சை எலுமிச்சம் பழங்கள் போதும். 3 எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி நம் வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் எலுமிச்சம் பழம் கருப்பு நிறத்தில் மாறினால் அதை தூக்கி எறிந்து விட்டு, மீண்டும் புதிய பச்சை எலுமிச்சம்பழத்தை வைக்கவேண்டும்.
இதனால் கெட்ட சக்திகள் அனைத்தும் வீட்டை விட்டு அகலும். ஒரு பீங்கான் கூடையில் 9 எலுமிச்சை பழங்களை போட்டு பிரிட்ஜில் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் போது 8 எலுமிச்சையை வைத்து, நடுவே ஒரு எலுமிச்சை வைத்தால் நமது வீட்டில் செல்வவளம் அதிகரிக்கும். அன்றாட வேலை செய்யும் இடம் அல்லது படிக்கும் இடங்களில் மேஜையின் மீது மூன்று எலுமிச்சம் பழங்களை வைப்பது மிகவும் நல்லது. ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் 3 எலுமிச்சம் பழத்தை வைத்து வீட்டில் உள்ள மேஜையில் வைத்தால் உறவு பலப்படும்.
வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது ஒரு எலுமிச்சம் பழத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சென்றாலும் அதுவும் நல்லது. நம்மை நோக்கி வரும் எதிர்மறை ஆற்றல் நம்மை விட்டு விலகும். நமது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற ஒரு எலுமிச்சம்பழத்தை 4 பகுதிகளாக அறுத்து, உப்பு பரப்பி தட்டின் நடுவே வைத்து கட்டிலுக்கு அடியில் வைத்து மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையை கையால் தொடாமல் ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து தூக்கி எறிந்து விட வேண்டும். இந்த முறைகளை நாம் பின்பற்றும் போது வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் முழுமையாக நம் வீட்டை விட்டு நீங்கி, வளம் பெறலாம்.