துருக்கியில் நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியிலுள்ள பாலிகேசிர் என்னும் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென அந்த பயணிகள் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் அந்தப் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதால் பேருந்து முழுவதும் சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புக் மீட்புக்குழுவினர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதனையடுத்து இந்த கோர விபத்தில் 15 பேர் பலியானதோடு மட்டுமின்றி 17 பேர் பலத்த காயமடைந்துள்ளார்கள். இதனை தொடர்ந்து காயமடைந்தவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மேலும் இந்த கோர விபத்திற்கான காரணம் குறித்த விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.