இங்கிலாந்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் இருந்து மீண்ட இளம்பெண் தற்போது உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் Eve Aston என்னும் 20 வயது மதிப்புத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் இங்கிலாந்திலுள்ள மான்ஸ்டர் என்னும் நகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தீவிரவாதி ஒருவர் அந்த இசை நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் Eve மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்.
அதன்பின் இவர் தற்போது அதிகப்படியான சத்தத்தைக் கூட கேட்க முடியாமல் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையிலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து Eve யின் தாய் கூறியதாவது, Eve மிகவும் வேடிக்கையான நகைச்சுவை உணர்வு மிக்க பெண் என்றும், அந்த இசை நிகழ்ச்சியில் தீவிரவாதி நடத்திய தாக்குதலால் பாதிக்கப்பட்ட eve சரியாக தூங்கவும் இல்லை என்றும், அவள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி திடீரென ஒரு நாள் இறந்து கிடந்தால் என்றும் வேதனையுடன் கூறியுள்ளார்.