ஆப்கானிஸ்தானின் முக்கிய மாகாணமான குண்டூஸையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டில் நாளுக்கு நாள் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் முக்கிய மாகாணங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கனவே தலிபான்கள் நிம்ரோஸ், ஜவ்ஜான், தாகார் உள்ளிட்ட மாகாணங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானின் முக்கியமான மாகாணமான குண்டூஸையும் கைப்பற்றியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.