தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. .
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான செயல்பாடு வழிமுறைகள் குறித்த கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வருடன் ஆலோசனை செய்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 1 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க உத்தேசித்துள்ள மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.