Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் 5ல் பங்கேற்கும்…. முன்னணி நடிகை…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணன் கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனாலான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்த முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருகின்றனர்.

அதன்படி ஐந்தாவது சீசனில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கனி, சிவாங்கி, தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோரும் நடிகர்-நடிகைகள் ராதாரவி, பூனம் பஜ்வா ஆகியோரும் கலந்து கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5 வது சீசனில் கலந்து கொள்ளப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |