Categories
உலக செய்திகள்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயம்… இன்று வெளியாகும் முக்கிய அறிக்கை… ஐ.நா. அறிவியல் குழு தகவல்..!!

இன்று காலநிலை மாற்றம் பற்றிய சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிவியல் தகவல்களை ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஒன்று அறிக்கையாக வெளியிடுகிறது.

இன்று காலநிலை மாற்றம் பற்றிய சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிவியல் தகவல்களை ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஒன்று அறிக்கையாக வெளியிடுகிறது. மேலும் இந்த அறிக்கை கிளாஸ்கோவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. காலநிலை உச்சி மாநாட்டிற்கு முன்பு புவி வெப்பமயமாதலால் ஏற்படும் எதிர்கால அபாயங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த உண்மையான தகவல்களை வழங்கும்.

அதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு நாடும் புவி வெப்பமயமாதலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து கிளாஸ்கோவில் வருகின்ற அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை நடைபெற உள்ள ஐ.நா. காலநிலை உச்சிமாநாட்டில் விவாதிக்க உள்ளன. இதற்கிடையே கிட்டத்தட்ட 200 நாடுகள் 2 டிகிரி செல்சியசுக்கு கீழே புவி வெப்பமயமாதலை வைத்துக் கொள்வது குறித்து பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |