கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் ரூ.2,63,976 கடன்சுமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.24 கோடியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி அதிகரித்து விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.