கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இதில் கடந்த அதிமுக ஆட்சியில் கடன் சுமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி சம்பவத்தை பெரிய அளவில் வெளியிட்ட ஊடகங்கள் திமுகவிற்கு ஆதரவாக மாறிவிட்டன என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் எங்கள் ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்கினோம் செலவுகள் இருந்தும் மின் கட்டணம், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவில்லை. எந்த ஆட்சி வந்தாலும் நஷ்டத்தை தவிர்க்க முடியாது என்று கூறினார். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க, நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.