ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் பேச்சிலர் படத்தில் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் ஐங்கரன், பேச்சிலர், ஜெயில், 4G உள்பட ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பேச்சிலர் படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பகவதி பெருமாள், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
https://twitter.com/dhibuofficial/status/1424031981466099717
முதலில் இந்த படத்திற்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமானார். இந்நிலையில் பேச்சிலர் படத்தில் திடீரென இசையமைப்பாளரை மாற்றியுள்ளனர். அதன்படி இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இந்த படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் அதில் விரைவில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.