Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடி…. ஊதாரித்தனமாக செலவு…. தமிழகம் மிக அதிகமாக பாதிக்கும்…!!!

தமிழகத்தில்  120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2011-16 இல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.17,000 கோடி. 2016-21இல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச பொருளாதார நெருக்கடி உருவானால் தமிழகம் மிக திகமாக பாதிக்கும் என்று தெரிவித்தார். மேலும் அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தின் ஒப்புதல் இன்றி ஒரு லட்சம் கோடி ஊதாரித்தனமாக செலவிடப்பட்டுள்ளது. அதிமுக அரசின் செயல்பாடுகளால் தனி நபர் ஒருவருக்கு ரூ.50,000 இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |