நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படுவதையொட்டி விற்பனை பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகும் பழங்கள் , காய்கறிகள் , பூக்கள் , இலைகளின் விலை சராசரியாக 50 சதவீதம் முதல் 100% வரை விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பொரிகடலை விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடைகளில் பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு வந்த விதவிதமான தோரணங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
இதேபோல் சந்தனம் , குங்குமம் , விபூதி , பன்னீர் , சாம்பிராணி , ஊதுபத்தி , சூடம் ஆகியவற்றின் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து இருந்தபோதும் பொதுமக்களும் , வியாபாரிகளும் பூஜை பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.சந்தையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது.