பெண் ஒருவரிடம் தங்க நகை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளம்பி ஏரிக்கரை பகுதியில் மலர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் மாடு மேய்த்து விட்டு வேப்ப மரத்தடியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் மலரின் வாய் மற்றும் கழுத்தை அழுத்தி பிடித்ததில் அவர் மயக்கம் அடைந்துள்ளார். இதனை அடுத்து மலர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். இது பற்றி மலரின் மகன் வினோத்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகார் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் ரேணுகாம்பாள் கோவில் தெருவில் வசிக்கும் சீராளன் என்பவர் மலரின் தங்க நகைகளை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து அவர் கொள்ளையடித்து வைத்திருந்த தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிறப்பாகவும் புலன் விசாரணை மேற்கொண்டு விரைவாக செயல்பட்டு வழிப்பறி வழக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்ய உதவிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம், அவரது குழுவினர் மற்றும் காவல்துறை நிலைய தனிப்பிரிவு சோமசுந்தரம் ஆகியோரை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாராட்டியுள்ளார்.