மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கர்த்தான்குளம் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சிவா என்ற மகன் வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காரியமங்கலம் அருகாமையில் அமைந்திருக்கும் மொலப்பனஅள்ளி பகுதியில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவி உள்ளார். இவர் சிவா ஓட்டுகின்ற லாரியில் சுதா லோடுமேனாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இதனையடுத்து மாலை நேரத்தில் தொழில் சம்பந்தமாக சிவாவும் மற்றும் சுதாவும் மோட்டார் சைக்கிளில் பாலக்கோட்டில் இருந்து ராயக்கோட்டை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது மகேந்திரமங்கலம் அருகாமையில் உள்ள சூடப்பட்டி பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சுதாவும் மற்றும் சிவாவும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர்.
இதனால் சிறிது நேரத்தில் சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார். அதன் பின் சுதாவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதில் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.