Categories
மாநில செய்திகள்

பொதுமக்கள் தலையில் இடி….. அதிகரிக்கும் மின் இணைப்பு கட்டணம் ……!!

புதிய மின் இணைப்புக்கான கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு இருப்பது பொதுமக்கள் , புதிய தொழில் தொடங்க இருப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் பால் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. முன்னதாக பஸ் கட்டணம் , கேஸ் , சிலிண்டர் , பெட்ரோல் , டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய மாநில அரசுகள் கடுமையாக உயர்த்தியுள்ளன. அடுத்த அதிரடியாக தற்போது தமிழக அரசு புதிய மின் இணைப்புக்கான கட்டணத்தை கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது. இது பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொழிற்சாலைகளுக்கு 110 KB ,  230 KB  , மும்முனை இணைப்பு பெற ஒரு லட்சம் ரூபாயாக இருந்த கட்டணம் 2 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பு அடையும் என்று குற்றச்சாட்டு நிலவுகிறது. பல்வேறு தொழிற் சங்கங்களும் மின் இணைப்பு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல் தற்காலிக இணைப்பு நீக்கம் , மீண்டும் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் ,  வளர்ச்சி கட்டணம் , பெயர் மாற்றம் ஆகியவற்றை மாறுதல் செய்வதற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

Categories

Tech |