Categories
தேசிய செய்திகள்

ஹாக்கி வீராங்கணைகளுக்கு தலா ரூ.31 லட்சம் பரிசு…. மத்திய பிரதேச அரசு அறிவிப்பு….!!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி முதன்முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்தது. ஆனால் அதில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடியது. அதில் தோல்வி அடைந்த இந்திய அணி நான்காம் இடத்தைப் பிடித்தது. பதக்கம் வெல்லாத போதும் வீராங்கனைகள் ஒவ்வொருவரும் தங்கம் என அவர்களது சாதனைகளை நாடே கொண்டாடி வருகின்றது.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஹாக்கி வீராங்கனைகள் அனைவருக்கும் தலா 31 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது. நமது மகளிர் ஹாக்கி அணி யினர் ஒலிம்பிக்கில் தோற்று இருந்தாலும் நாட்டு மக்களின் இதயத்தை வென்று விட்டனர் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் கூறியுள்ளார். மேலும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |