இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி ஆட்டம் மழையால் ரத்தானது .
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்றைய கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டு போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மழையால் பறிபோனது. மேலும் இந்திய அணி வெற்றி பெற 157 ரன்களும் ,கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்த நிலையில் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் அளிக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில்,” கடைசி நாளில் போட்டி நடைபெற்று இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் .ஆனால் போட்டி நடக்காமல் போனது வருத்தமளிக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் எங்களுக்கு தான் வெற்றி வாய்ப்பு இருந்ததை நாங்கள் அறிவோம். நிச்சயம் எங்கள் கைதான் ஓங்கி இருந்தது “என்று அவர் கூறினார்.