கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு முதலில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் இதனை மாற்றி ‘வெந்து தணிந்தது காடு’ என புதிதாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்த படக்குழு, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் சமீபத்தில் வெளியிட்டனர். போஸ்டரில் அழுக்கு லுங்கி, சட்டையுடன் சிம்பு மெலிந்த தோற்றத்தில் இருப்பதை பார்த்து அனைவரும் அசந்து போனார்கள்.
இந்நிலையில், இப்படத்துக்காக நடிகர் சிம்பு 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஆறு மாதங்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்து மெலிந்த தோற்றத்துக்கு சிம்பு மாறி உள்ளார்.திருச்செந்தூரில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.