Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் போட்டிகளில்….. 3 தங்க பதக்கங்கள்…. சுவிட்சர்லாந்து வீரர்களின் சாதனை….!!

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் சுவிட்சர்லாந்து வீரர்கள் 13 பதக்கங்களை வென்றுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் சுவிட்சர்லாந்து வீரர் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 13 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். அதில் மூன்று தங்கப்பதக்கங்கள் ஆகும். முதலில் Mount Bike Race பந்தயத்தில் சிறப்பாக விளையாடி அதில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் பதக்கங்கள் பெற்றனர். இதனை அடுத்து டென்னிஸ் விளையாட்டில் 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் துப்பாக்கி சுடுதலில் ஒரு தங்கமும் வெண்கலமும் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து சைக்கிள் பந்தயம், கடற்கரை கைப்பந்து, நீச்சல் போட்டிகளிலும் சுவிட்சர்லாந்து வீரர் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த நிலையில் சர்வதேச தரவரிசை பட்டியலில் சுவிட்சர்லாந்து 24வது இடத்தை வகிக்கிறது. மேலும் அதிகமான பதக்கங்களை பெற்று சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வீரர்கள் பெருமை சேர்த்துள்ளனர். அதிலும் தரவரிசையில் முதல் மூன்று இடங்களை அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |