ஆப்பிரிக்காவிலேயே மிகவும் அதிக வயதான அலக்பா எனும் ஆமை உடல்நலக் குறைவால் இறந்தது .
ஆப்பிரிக்காவிலேயே மிக அதிக வயதான ஆமையான அலக்பா (Alagba) எனும் 344 வயதுடைய பெண் ஆமை ஓன்று தென்மேற்கு நைஜீரியாவின் ஒக்போமோசோ அரண்மனையில் வைத்து, மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்தது. இந்த ஆமையை சரியாக பார்த்து பராமரிப்பதற்கு மட்டும் 2 வேலையாட்கள் நியமிக்கப்பட்டு பத்திரமாக பாதுகாத்துவந்தனர்.
இந்த ஆமை மற்ற ஆமை போல சாதாரண ஆமை கிடையாது. இது எளிதில் நோய்களை குணப்படுத்தும் விசேஷ ஆற்றல் இருப்பதாக கருதப்பட்டதால், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து பொதுமக்கள் ஆமையை பார்த்துவிட்டு செல்வது வழக்கமான செயலாக இருந்து வந்த நிலையில் அலக்பா எனும் அந்த ஆமை திடீர் உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
ஒக்போமோசோ அரண்மனை வட்டாரமும் ஆமை இறந்து விட்டது உண்மைதான் என்று உறுதிபடுத்தியுள்ளது. ஆனால் அதேசமயம் , ஆமை 344 வயது வரை வாழ்ந்ததாக கூறப்படுவதில் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் யோமி அக்பாடோ எனும் கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளது கூறுவது குறிப்பிடத்தக்கது.