காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்ததால் காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பச்சை பள்ளி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக செங்கதிர் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இம்மாவட்டத்தின் காவல்துறை குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து காலை நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வழியில் அமைந்திருக்கும் பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு சென்றுள்ளார்.
அதன் பின் பெட்ரோல் பங்கிலிருந்து சிறிது தூரம் சென்றவுடன் செங்கதிர் திடீரென மயங்கி சாலையில் கீழே விழுந்துள்ளார். பின்னர் அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இது பற்றி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தகவலின் படி இன்ஸ்பெக்டர் நவாஷ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி உள்ளார். பிறகு இறந்து போன சப்-இன்ஸ்பெக்டருக்கு சுஜாதா என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.