Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு?…. வெளியான தகவல்…!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா சூழலில் பள்ளிகள் திறக்கப்படாததால் 20% பாடத்திட்டத்தை குறைக்கவும், தொடக்கக்கல்வி வகுப்புகளை திறக்கவும் பள்ளிக்கல்வி ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் தகவல் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 – 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், தொடக்கக்கல்வி வகுப்புகளை தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |