ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறு வாக்கு எண்ணிக்கையில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று அதிமுக MLA இன்பத்துரை தெரிவித்துள்ளார்.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி MLA இன்பதுரை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , திமுக வேட்பாளர் அப்பாவுக்கு விழுந்த 201 தபால் வாக்குகளில் முறையாக சான்றில்லை. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவு தெரிந்து விட்டது. அதில் திமுக வெற்றி உறுதி என்று மு.க ஸ்டாலின் நேற்றைய தினம் பேசியுள்ளார்.நடைபெறுகிற இருக்கின்ற நாங்குநேரி , விக்கிரவாண்டியில் தேர்தலில் தனக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் இப்படி சொல்கிறார். இதை நான் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பேன். மக்களை திசை திருப்புவதற்காக கொஞ்சம் ஸ்டாலின் இப்படி பேசியிருக்கிறார். யாரோ எழுதிக் கொடுத்த துண்டு சீட்டை நம்பி அவர் பேசி விட்டால் , அவருக்கு சட்டம் தெரியாது. நான் ஒரு வழக்கறிஞர் சட்டம் தெரியாமல் அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.
இந்த மறுவாக்கு எண்ணிக்கை முடிவில் நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன். எனக்கு பயமில்லை. என்னுடைய தெய்வத்தின் வழிகாட்டுதல் எனக்கு இருக்கிறது. புரட்சித்தலைவரின் ஆன்மா எனக்கு வழிகாட்டுகிறது. புரட்சித்தலைவி அம்மாவின் அருள் கடாட்சம் என்மீது இருக்கிறது. ஒன்றரை கோடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது.எங்களுடைய கழகத்தின் முதலமைச்சர் , துணை முதல்வர் எனக்கு துணையாக இருக்கிறார். நான் ஏன் பயப்படனும் , சட்டம் எங்களிடம் இடமிருக்கிறது , நியாயம் எங்களின் பக்கம் இருக்கிறது. நாங்கள் பயப்பட வேண்டியதில்லை என்று அதிமுக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை தெரிவித்தார்.