Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கான ஆன்லைன் சேமிப்பு கணக்கு… எப்படி திறப்பது?… வாங்க பார்க்கலாம்…!!!

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை நன்றாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கான சேமிப்பு பிறந்த நாள் முதலே பெற்றோர்கள் தொடங்குவார்கள். அதன்படி உங்கள் குழந்தையின் பணத்தை நீங்கள் திறக்க விரும்பினால், நாட்டிலேயே மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற வங்கியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெஹல கதம் மற்றும் பேஸ்லி உதான் என்ற பெயரில் மைனர்களுக்கான சேமிப்பு கணக்கை திறக்கும் வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.

அதுமட்டுமன்றி வங்கி கணக்குகளில் குழந்தைகள் பணம் எடுப்பதற்கான வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்கின் கீழ் எந்த வயதினருக்கும் சிறு குழந்தைகளுடன் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் கூட்டுக் கணக்கை திறந்து கொள்ளலாம். இதனை பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது குழந்தை ஒரு தனி நபராக இருக்கலாம். இந்த அட்டை சிறு மற்றும் பாதுகாவலர் பெயரில் வழங்கப்படும். மேலும் இந்த கணக்கில் மொபைல் வங்கி வசதி உள்ளது.

இதில் அனைத்து வகையான பில் களும் செலுத்தலாம். தினசரி பரிவர்த்தனைக்கு இரண்டாயிரம் ரூபாய் வரை வரம்பு இருக்கின்றது. மேலும் ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு வசதியும் உள்ளது. அதில் ஐந்தாயிரம் வரை பெற்றுக் கொள்ள முடியும். இணையவங்கி வசதிக்கு தினமும் 5 ஆயிரம் வரை வரம்பு உள்ளது. பெற்றோருக்கு தனிப்பட்ட விபத்து காப்பீட்டுத் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |