வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சுப்பிரமணியன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் சுப்பிரமணியன் தனது குடும்பத்துடன் சமயபுரம் கோவிலுக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய சுப்ரமணியன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 17 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதை சுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தினர் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து சுப்பிரமணியன் விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட நபர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இஸ்மாயில் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இஸ்மாயிலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.