Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக தமிழ்நாட்டில்‌ இன்று நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, சேலம்‌, நாமக்கல்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்‌, உள்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்ய கூடும்‌.

நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ நாளை கன மழையும்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கடலூர்‌, விழுப்புரம்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌, உள்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்ய கூடும்‌. ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |