ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை குறித்து ஸ்டாலினை ராதாபுரம் அதிமுக MLA இன்பதுரை கிண்டலடித்துள்ளார்.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி MLA இன்பதுரை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , ராதாபுரம் சட்டமன்றத்தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையால் இன்பதுரை துன்பதுரை ஆகிவிட்டார் என்று திமுக தலைவர் முக. சொல்லியுள்ளார்.எங்க அப்பா எனக்கு தமிழ்ல பெயர் வச்சு இருக்காங்க இன்பதுரை என்று அவருடைய தந்தையாரும் அவருக்கு முதலில் ஒரு பெயர் வைத்தார் அய்யாதுரை. அய்யாதுரை தான் அவருக்கு வைத்த முதல் பெயர். பின்னர் தான் ஸ்டாலின் என்று பெயர் வச்சுருக்காங்க.
நாங்கள் பயந்து விட்டதாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் அப்படி சொல்லி இருக்காரு. அவருக்கும் ஒரு வழக்கு இருக்கிறது.அவர் கொளத்தூரில் பெற்ற வெற்றியை எதிர்த்து சைதை துரைசாமி ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு நிரூபணமானால் ஸ்டாலின் தண்டனை பெறுவார். அவர் 6 வருடம் தேர்தலில் நிற்க முடியாமல் போகும். அப்படிப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் வருகிறது. ராதாபுரம் மறுவாக்குப்பதிவு வழக்கில் இன்பதுரை நான் பேரின்பத்துரையாக வெளியே வருவேன். ஆனால் ஸ்டாலின் வழக்கு முடிவில் அய்யாதுரை என்று அழைக்கப்படும் ஸ்டாலின் ஐயோ..!! ”துரை” என்று அழைக்கும் நிலைமைக்கு ஆளாவார் என்று அதிமுக MLA இன்பதுரை தெரிவித்தார்.