ட்விட்டர் சட்டங்களை மீறியதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக ட்விட்டர் தங்களது விதிமுறைகளை மீறுபவர்களின் கணக்கை முடக்கி வருகின்றது. அந்த வகையில் கட்சி தலைவர்கள் பலரின் கணக்குகள் முடக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ட்விட்டரில் ப்ளூ டிக் ஒன்று வழங்கப்படும். அந்த ப்ளூ டிக்கும் அவ்வப்போது நீக்கப்பட்டு, மீண்டும் கொடுக்கப்பட்டதாகவும் ட்விட்டர் மீது பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் சட்டங்களை மீறியதற்காக சில மணிநேரங்களுக்கு அந்த டுவிட்டர் பக்கத்தை இயக்காதவாறு முடக்கியுள்ளது. ட்விட்டரின் இரட்டை நிலை தொடர்கிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.