இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் சிறு,குறு தொழில்கள், கைவினைஞர்கள், நெசவாளிகள் ஆகியோருக்கு உதவிட சம்பல்பூர் ஐஐடியுடன் கூட்டணி அமைத்து அவர்களுக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக பிலிப்கார்ட் நிறுவனம் மற்றும் சம்பல்பூர் ஐஐடியுடன் அடுத்த சில வாரங்களுக்குள் கையெழுத்தாக இருக்கிறது என்று தேசிய கைத்தறி தினத்தையொட்டி நேற்று இந்த அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.
இதன் மூலமாக சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலேயும் மார்க்கெட்டை முழுமையாகபயன்படுத்திக்கொள்ள முடியாதவர்களுக்கு தங்கள் அறிவு, அனுபவத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. தொழிலை எப்படி திறம்பட செய்வது? என்று பகிர்ந்துகொள்ள இருக்கிறது. இதன் மூலமாக சிறு, குறு நடுத்தர தொழில் செய்பவர்கள், நெசவாளிகள் ஆகியோர் தங்களுடைய பொருள்களை நாடு முழுவதும் விற்பனை செய்ய வழிவகை ஏற்படுத்தவும் பிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது.