பொருளாதாரத்தில் குறைந்த நாடுகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள போராடி வரும் நிலையில் பிரிட்டன் அதிக அளவு தடுப்பூசியை ஆர்டர் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே Airfinity பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பிரிட்டனுக்கு 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 467 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தது. மேலும் பிரிட்டனில் இளைஞர்களுக்கு மூன்றாவது டோஸ் வழங்க 256.6 மில்லியன் டோஸ் தேவைப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
The Global Justice Now group அமைப்பு பிரிட்டனிடம் இருக்கும் தடுப்பூசிகள் உலகில் உள்ள குறைந்தபட்ச தடுப்பூசி போட்டுள்ள பத்து நாடுகளுக்கு விநியோகம் செய்யலாம் என்றும் அதன் மூலம் சுமார் 211 மில்லியன் மக்கள் பயன்பெறுவர் என்வும் தெரிவித்துள்ளது. மேலும் குறைந்த மற்றும் நடுத்தர பொருளாதாரத்தை கொண்ட நாடுகள் தடுப்பூசி வழங்க போராடி வரும் நிலையில் பிரிட்டன் மூன்றாவது டோஸ் இளைஞர்களுக்கு செய்த ஏற்ப்பாடு நாள்தோறும் கொரோனாவுக்கு பலியாகும் ஆயிரக்கணக்கான மக்களை அவமதிக்கும் நடத்தை எனவும் தெரிவித்துள்ளது.