Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை…. தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல்…!!!

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது விசாரணை நடத்தி வருகின்றது. இந்த விசாரணையில் தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த விரிவான விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு தாக்கல் செய்துள்ளது. 718 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 1,126 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்கு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் பதில் தர 3 வாரங்கள் அவகாசம் அளித்து, செப்டம்பர் 13 ஆம் தேதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Categories

Tech |