தனுசு ராசி அன்பர்களே.! பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும்.
இன்று உங்களுடைய தனித்திறமை வெளிப்படும். மிகப்பெரிய திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செழிக்க அனுபவம் கூடும். கூடுதல் பணவரவு இருக்கின்றது. வழக்கு விவகாரங்களில் வெற்றி இருக்கும். உங்களுடைய கஷ்டமான நிலைமைகள் எல்லாம் சரியாகும். சமரசமான தீர்வுகள் அனைத்து விஷயங்களிலும் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவரின் செயல்பாடுகள் கோபத்தை ஏற்படுத்தினாலும் அதனை பற்றி பெரிதுபடுத்த மாட்டீர்கள். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினைகள் பெரிதாக இல்லை. எதையும் மனம் விட்டுப் பேசினால் எல்லாம் தீர்ந்துவிடும். கோபத்தினால் மனவருத்தங்கள் தான் அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள் எல்லாம் நல்ல பலனைக் கொடுக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். பயணத்தால் முன்னேற்றம் இருக்கும்.
புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வாழ்க்கையில் புதிய பாதை ஏற்படக்கூடும். அதில் நீங்கள் வெற்றி நடை போடுவீர்கள். மனம் கலங்காமல் இருக்க வேண்டும். எல்லாம் உங்களுக்கு நல்லதாக நடக்கும். முன்னேற்றமான தருணங்கள் இருக்கும். காதலின் நிலைபாடுகள் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை ஏற்படும். கல்வியில் எதையும் சாதிக்க கூடிய சூழல் இருக்கும். தைரியமாக இருந்து எந்த ஒரு காரியத்தையும் செய்வீர்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்