நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவிகளை தேர்வுக்கு தயார்படுத்தும் பணியில் கல்வி துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள் மருத்துவ கல்வி பயில்வதர்க்கான நீட் தகுதி தேர்வு அடுத்த மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நீட் தேர்விற்கு விண்ணபித்த மாணவ மாணவிகள் நீட் தேர்வை எதிர்கொள்வதர்க்கான பணிகளை கல்வி துறையினர் மேற்கொண்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை தயார்படுத்தும் பணிகளில் ஈடுபடுமாறு முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து ராமநாதபுரத்தில் அரசு பள்ளியில் பயின்ற 74 மாணவர்கள், அரசு எலைட் சிறப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் 37 பேர், தனியார் பள்ளி மாணவர்கள் 143 பேர் என இதுவரை 254 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவிகளுக்கான இணைய வகுப்புகள் நடந்து வருவதால் அதிகளவு மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என கல்வித்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.