Categories
தேசிய செய்திகள்

போராட்டமா நடத்துறீங்க ? ”48,000 பேர் டிஸ்மிஸ்” தெலுங்கானா முதல்வர் அதிரடி …..!!

தெலங்கானா_வில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 48,000 பேரை பணி நீக்கம் செய்து முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்து வருகின்றார். அண்மையில் தனியார் போக்குவரத்து ஊழியர்களை மாநில அரசு ஊழியராக மாற்றி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதே போல எங்களையும் அரசு ஊழியர்களாக வேண்டுமென்று தெலங்கானா போக்குவரத்துக் கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். இதனால் தெலுங்கானா போக்குவரத்து முழுமையாக பாதித்தது. மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டுமென்று மாநில அரசு எச்சரிக்கை விடுத்தது.

கடந்த சனிக்கிழமை போராட்டதில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து  49, 340 பேர் பணியாற்றும் தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தில் 1,200 பேர் பணிக்குத் திரும்பினர். இதைத்தொடர்ந்து இந்நிலையில் போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அரசின் எச்சரிக்கைக்கு பின்னரும் பணிக்கு வராதவர்கள் வேலை இழந்ததாகக் கருதப்படுவார்கள். பண்டிகை கால நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டடுவது குற்றமாகுமென தெரிவித்த அவர்  பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக புதிதாக ஆட்கள் தேர்வு செய்யபடுவார்கள். எந்த தொழிற்சங்கத்திலும் சேரமாட்டோம் என உறுதியளித்த பின்னர் புதிய ஆட்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

Categories

Tech |