பொது இடத்தில் வைத்து காவல்துறையினரின் முன்னிலையில் சண்டை போட்டுக்கொண்ட 2 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கே.கே.நகர் கிழக்குதெருவில் யமுனா செல்வக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரண்மனை பகுதியில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்த நிலையில் அவ்வபோது பிணம் எரிக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வக்குமார் பிணம் எரிக்க செல்லும்போது கே.கே.நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரை அழைத்து சென்றுள்ளார். இந்த வேலை செய்ததற்க்கான கூலியை செல்வக்குமார் சுரேஷுக்கு தராமல் காலம் தாழ்த்தியுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதனைபார்த்த காவல்துறையினர் அவர்களை தடுக்க முயன்றுள்ளனர். இருப்பினும் அவர்கள் காவல்துறையினரை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து சண்டை போட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் பொது இடத்தில் சண்டை போட்டதர்க்காக செல்வக்குமார் மற்றும் சுரேஷ் மீது ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சண்டை காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றது.