தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. ஆனால் செப்டம்பர்-1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான காலஅவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்பிக்க கால அவகாசத்தை தமிழக அரசு மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி ஊரடங்கை கருத்தில் கொண்டு ஆகஸ்ட்-13 வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.