மக்கள் வீடுகளிலேயே தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் பூஜைகள் செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவில்களில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடி அமாவாசை தினத்தின் முக்கிய நிகழ்ச்சிய முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்குதல் ஆகும்.
ஆனால் கோவில்களில் பக்தர்கள் வழிபட மற்றும் ஆறுகளில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதி மக்கள் கலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் மக்கள் அமர்ந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்துள்ளனர். மேலும் காவிரி கரைபகுதிகளில் விதிக்கப்பட்ட தடையால் பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் பூஜை செய்து வழிபட்டுள்ளனர்.