ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் பல்வேறு வீரர்களும் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் தற்போது நடைபெறும் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்கள் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வவென்றுள்ளது. இதற்குமுன் 2012-இல் லண்டன் ஒலிம்பிக்கில் 6 பக்கங்கள் வென்றிருந்தது. அதுவே அதிகபட்ச சாதனையாக இருந்தது.
சீனாவுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை. எனினும் இந்திய விளையாட்டுத் துறையில் பெரும் முன்னேற்றம் தொடங்கியுள்ளது என்றே கருதலாம். இந்நிலையில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் ரெட்மி நிறுவனம் பதக்கம் வென்ற அனைத்து இந்திய வீரர்களுக்கும் ரூ.70,000 மதிப்புள்ளா MI 11 Ultra ஸ்மார்ட்போனை பரிசளிப்பதாக அறிவித்துள்ளது.