உருண்டை ரசம்
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு – 1/2 கப்
கடலைப்பருப்பு – 1/4 கப்
புளித் தண்ணீர் – 2 கப்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
கடுகு – 1/4 ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க:
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊற வைத்து, அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் இதனை ஆவியில் வேகவைத்து உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும் . வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீருடன் மஞ்சள்தூள் சேர்த்து, கொதிக்கவிடவும். இதனுடன் வறுத்து அரைத்த விழுது , உப்பு மற்றும் பருப்பு உருண்டைகள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து கடைசியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்கினால் சுவையான உருண்டை ரசம் தயார் !!!