Categories
தேசிய செய்திகள்

இனி வெளிநாட்டினரும் தடுப்பூசி போட்டுக்கலாம்…. மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதனை அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. மக்கள் கோவின் இணையதளத்தின் முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள வெளிநாட்டவர்களும் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொரோனா தடுப்பூசியை பெறலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பாஸ்போர்ட்டை அடையாள ஆவணமாக பயன்படுத்தி கோவின் செயலியில் வெளிநாட்டினர் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |