நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் அந்தந்த மாநிலத்தில் உள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் கேரள மாநில சட்டமன்றத்தில் கல்வித் துறை அமைச்சர் பி.சிவன்குட்டி பள்ளிகள் திறப்பு குறித்து பேசுகையில், “ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் படுவதால் மாணவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இருப்பினும் பள்ளிகள் தரப்பில் உடனடியாக முடிவெடுக்க முடியாது. உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டும். அதற்கு முன்னதாக ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு மற்றும் வல்லுனர்கள் குழுவிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் படிப்படியாக பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.