தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறார். மேலும் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்பு நடைபெறும் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் பணியாளர்கள் விடுபடாமல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.