Categories
மாநில செய்திகள்

தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கை… முக்கிய அம்சங்கள்….!!!!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் நிதிநிலை சீர்கேடு குறித்த அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டார். அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் பணக்கார மாநிலம். ஆட்சியை ஒழுங்காக நடத்தி உட்கட்டமைப்பு மேம்படுத்தினால் வருவாயை பெருக்கலாம். சுமார் 29 லட்சம் ஹெக்டேர் நிலத்திற்கு தமிழகம் உரிமையாளர். அதில் 2.05 லட்சம் ஹெக்டர் ஆக்கிரமிப்பில் உள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடி உருவானால் தமிழகம் மிக அதிகமாக பாதிக்கும்.

மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை ரூ.20,033 கோடி ஆகும். தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது. தமிழக அரசின் கடன் சுமை 5.24 லட்சம் கோடியாக உள்ளது. அரசு பேருந்து ஒரு கிலோமீட்டர் ஓடினால் தமிழக அரசுக்கு ரூ.59,15 நஷ்டம் ஏற்படுகிறது. போக்குவரத்து துறையில் ஒரு ரூபாய் வருமானம் வந்தால் இரண்டு ரூபாய் செலவு ஆகிறது. அதில் ரூ.1.50 ஓய்வூதியத்திற்கு செல்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |