Categories
விளையாட்டு

இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பருக்கு… ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு…..!!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பின்பு வெண்கலப் பதக்கம் வென்றது. இந்திய ஹாக்கி அணியின் தூணாக கருதப்படும் கோல் கீப்பரான பி.ஆர். ஸ்ரீஜேஷ் அற்புதமாக தன் பணியை செய்து ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்றார். ஸ்ரீஜேஷ் திறமையாக கோல் கீப்பிங் பணியை செய்யவில்லை என்றால் வெண்கல் பதக்க வாய்ப்பை இந்தியா இழந்திருக்கும்.

ஸ்ரீஜேஷை ஊக்குவிக்கும்விதமாக அவருக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகையை அறிவித்திருக்கிறார் துபாயைச் சேர்ந்த விபிஎஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் ஷம்ஷீர் வயாலில். இது குறித்து அவர் கூறும்போது “இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றதற்கு ஸ்ரீஜேஷின் பங்கு மிகவும் முக்கியமானது. அவரை கெளரவிக்கும்விதமாக ரூ.1 கோடி பரிசுத் தொகையாக கொடுக்க முன்வந்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |