Categories
மாநில செய்திகள்

அறிக்கை மட்டும் போதாது….. சீர்திருத்தங்கள் தேவை…. பாஜக தலைவர் அண்ணாமலை….!!!!

தமிழகத்தின் நிதி நிலையையும், நிதிச் சுமையையும் சமாளிக்க, அறிக்கை மட்டும் போதாது, வெளிப்படையான சீர்திருத்தங்கள் வேண்டும் என, தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க., தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் தற்போதைய நிதி ஆதார நிலைகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் நிதிநிலை, நிதிச்சுமையை சமாளிக்க அறிக்கை மட்டும் போதாது. சீர்திருத்தங்கள் தேவை. கவலைத் தரக்கூடிய வகையில் அமைந்துள்ள வெள்ளை அறிக்கை அதிர்ச்சியுடன் சிந்திக்க வைக்கிறது. இலவசம், கருணை தொகைகளை ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். இருட்டை இகழ்வதைவிட வெளிச்சத்தை தூண்டுவதே நல்லது என்பதற்கேற்ப அரசு செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |